எங்க சொந்த விவகாரத்தில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை: பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா

Share

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து அங்கு ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். பூமி பூஜை விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அயோத்தியில் கோவில் கட்ட இந்திய உச்சநீதி மன்றம் அனுமதி அளித்து வழங்கிய தீர்ப்பு குறைபாடு உடையது என்றும், நீதியை விட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இந்தியாவில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் ஓங்கி வருவதாகவும் கூறி இருந்தது.

அத்துடன் சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா,

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டி விடும் பாகிஸ்தானின் இந்த கருத்து ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. தனது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு உரிமைகள் வழங்க மறுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு கூறுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும், மதரீதியாக தூண்டிவிடுவதையும் பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


Share

Related posts

நீரவ் மோடி,மெகுல் சோக்சி விற்றது போலி வைரமா???

Admin

சீனத் தூதரகம் தகவல் திருடும் மையமா? – மைக் பாம்பியோ குற்றச்சாட்டு

Admin

செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

Admin

Leave a Comment