மாஸ்க் கில் தேசியக்கொடி… குப்பையில் வீசவா?

மாஸ்க்
Share

முகக்கவசங்களில் இந்திய தேசியக் கொடியை அச்சடித்து விற்பனைச் எய்வதை =க் கண்டித்து பால் முகவர்கள் சங்கம் புகார் மனு அளித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி, காவல் ஆணையருக்கு இணையவழியில் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் “கோவிட்-19” நோய் பெருந்தொற்றினை தடுக்க மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற அரசின் உத்தரவை பயன்படுத்தி, முகக்கவசங்களில் நம் நாட்டின் தேசியக் கொடி அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தேசப்பற்றை வளர்ப்பதாக எண்ணிக் கொண்டு, வணிக ரீதியில் தேசியக்கொடியின் வர்ணத்தை அப்படியே அச்சிட்டு விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களை பொதுமக்கள் சில முறை பயன்படுத்திய பிறகு குப்பையிலும், சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் தூக்கி வீசி விடுவர்.

நம் தேசியக் கொடியைப் போல் அப்படியே அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு குப்பையில் தூக்கி வீசப்படுவது நம் தேசியக்கொடியை அவமதிக்கின்ற செயலாகும்.

எனவே, முகக்கவசங்களில் தேசியக்கொடியை அச்சிட்டு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். அத்துடன் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அவ்வகையான முகக்கவசங்களை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


Share

Related posts

கொரோனா பாதிக்காமல் இருக்க மது: இணையத்தில் வைரல்

Admin

ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து: இளைஞர் காங்கிரசார் கண்டனம்

Admin

புதிய தேசிய கல்விக் கொள்கை: தமிழகத்தில் நாளை ஆலோசனை

Admin

Leave a Comment