இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது என அதன் தலைவர் கே. சிவன் தெரிவித்துள்ளார்.விண்வெளித் துறையில் இந்தியாவின் திறன்கள் பற்றிய இணையவழி கலந்துரையாடலில் கே.சிவன் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிவன் விண்வெளித் துறையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சீர்திருத்தங்கள், நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இஸ்ரோவை தனியார்மயமாக்கப்படும் என்ற தவறான புரிதல்கள் உள்ளன. இஸ்ரோ தனியார்மயமாக்கப்படாது. சொல்லப்போனால் சீர்திருத்தங்களின் முழு செயல்பாடும், தனிநபர்கள் விண்வெளித் துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவே உதவுகிறது.என தெரிவித்துள்ளார்..