உ.பி.யில் சுடப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி மரணம்

Share

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காசியாபாத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவர் தனது மகள்களுடன் விஜய் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் விக்ரமை வழிமறித்து தாக்கியும் அவரை துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பத்திரிகையாளருக்கே இந்த நிலை? சாமானிய மக்கள்- பிரியங்கா கேள்வி

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளதாகவும், தெரிவிக்கபட்டுள்ளது.துப்பாக்கியால் சுடப்பட்டபத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனத்தை பதிவும் செய்து வரும் நிலையில்,காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பல முக்கியத் தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்

இந்நிலையில், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி பத்திரிகையாளர் உயிரிழந்தார்.


Share

Related posts

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு:பரோல் வழங்குவதில்ஏன் தாமதம் நீதிபதிகள் கேள்வி??

Admin

மோடி அரசிடம் திட்டம் இல்லை: ப. சிதம்பரம் டிவிட்

Admin

‘நீட்’ தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்

Admin

Leave a Comment