சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.கொரோனா உறுதியான கார்த்தி சிதம்பரம் சென்னையில் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.