கேரள முதல்வருக்கு கொரோனா இல்லை

Share

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., காவலர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டிருந்தார்.

மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவராகவே தனிமைப்படுத்திக்கொண்டார்.இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயனுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.


Share

Related posts

கிராம சபை கூட்டங்கள் இந்த முறை தேவையில்லையா?

Admin

பெங்களூருவில் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை முழு ஊரடங்கு: கர்நாடகா அரசு

Admin

புதுச்சேரியில் சித்த மருத்துவமனை:முதல்வர் உத்தரவு

Admin

Leave a Comment