பாபர் மசூதின்னா என்ன? அத்வானி மறுப்பு

பாபர் மசூதி
Share

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாடுகளையும் அத்வானி மறுத்துள்ளார்.

உ.பி., மாநிலம் அயோத்தியில், ஆர்.எஸ்.எஸ். கரசேவகர்களால் 1992ஆம் ஆண்டு, பாபர்மசூதி இடிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட, 32 பேருக்கு எதிராக, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, லக்னோவில் உள்ள, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

latest tamil news


இது தொடர்பாக இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானி விசாரிக்கப்பட்டார். ’வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று (ஜூலை 24) ஆஜராகி, வாக்குமூலம் பதிவு செய்தார்.

அவரிடம் சிபிஐ சிறப்பு கோர்ட் நீதிபதிகள் சுமார் 4.5 மணி நேரம் விசாரணை நடத்தினர். காலை 11 மணி முதல் 3.30 மணி வரை, 100க்கும் அதிகமான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

அவர் மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

இதனோடு தொடர்புடைய மற்றொரு வழக்குதான் ராமஜென்ம பூமி வழக்கு. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான அந்த வழக்கில் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பு வெளியானது.

அதன்படி தான், தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது.

ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கு மட்டும் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் தற்போது விசாரணை வேகப்படுத்தப்பட்டுள்ளது.


Share

Related posts

கிராம சபை கூட்டங்கள் இந்த முறை தேவையில்லையா?

Admin

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போதிய விழிப்புணர்வு வேண்டும் – பிரதமர் மோடி

Admin

இந்தியாவின் முதல் விவசாயிகள் ரயில்: மகாராஷ்டிரா – பீகார் இடையே தொடக்கம்

Admin

Leave a Comment