சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில், இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளன. கூட்டம் கூடக் கூடாது. பொதுவெளிக்கு யாரும் வெளியில் வரக் கூடாது. தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என ஏராளமான அறிவுறுத்தல்கள் நடைமுறையில் இருக்கும் இந்த சூழலில் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் எப்படி நடக்கும் என்று ஏராளமான கேள்விகள் இருந்தன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொண்டாட்டடங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு
தேசிய, மாநில, மாவட்ட மற்றும் பஞ்சாயத்து அளவிலான கொண்டாட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளு வெளியிடப்பட்டுள்ளன.