வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மத்திய மற்றும் வடஇந்திய பகுதிகளில் அடுத்த 3, 4 நாட்களுக்கு பருவமழை தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர கர்நாடகத்திலும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கரில் அடுத்த 12 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.