நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல்

Share

கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது குறித்து  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் ஆலோசனை நடத்தினர்.

இதன்படி நாடாளுமன்ற இரு அவைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. உறுப்பினர்களுக்கு அவை அலுவல் தெரியும் வகையில் 4 பெரிய திரைகளும் 6 சிறிய திரைகளும் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் முதல் வாரத்தில் துவங்கும் என்றும், 7 முதல் 8 நாட்கள் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தொடரில் 11 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Share

Related posts

பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது-அபிஜித் முகர்ஜி தகவல்

Admin

இப்படிதான் சத்யராஜ்க்கு பாகுபலி பட வாய்ப்பு கிடைத்ததா!

Admin

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க போவதில்லை:உமாபாரதி

Admin

Leave a Comment