கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

Share

சென்னை – போர்ட் பிளேர் இடையே கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழைகளால் அமைக்கப்பட்டுள்ள கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். தற்போது இந்த சேவையினை நாட்டு மக்களுக்கு அர்பணித்த பிரதமர். பின்னர் பேசியதாவது:ஒன்றரை ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

அந்தமான், நிகோபர் பகுதிகளுக்கு அதிவிரைவு இணையதள வசதி கிடைக்கும். இனிமேல், ஆன்லைன் வகுப்புகள், வங்கி சேவை, ஆன்லைன் வணிகம், டெலிமெடிசன் உள்ளிட்டவற்றை அந்தமான் மக்களுக்கும் கிடைக்கும்.ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் சிறப்பு கப்பல்களின் உதவியை கொண்டு 2, 300 கி.மீ.க்கு கடலுக்கு அடியில் கேபிள் கேபிள் பதிக்கும் இத்திட்டம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று பிரதமர் பேசினார்


Share

Related posts

40 வருடத்திற்கு பிறகு கிடைத்த கின்னஸ் சான்றிதழ்

Admin

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

Admin

கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்அலாட்..

Admin

Leave a Comment