ராமர் கோயில்: அயோத்தியில் மோடி… இன்று நடந்தவை என்னென்ன?

அயோத்தி
Share

* ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம ராஜ்யத்தின் கொள்கைகளை பின்பற்றி கட்டமைக்கப்படும் கோவில் நவீன இந்தியாவின் ஒரு அடையாளமாக இருக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

* அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்தடுத்தாக பிரதமர் மோடி உரையாற்றும் நிகழ்வு அரங்கேறப் போகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், ராமர் கோயில் அறக்கட்டளை தலைவர் நித்ய கோபால் தாஸ் ஆகியோர் அமரவுள்ளனர்.

* கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீராம கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அயோத்தியில் ராமஜென்மபூமி நிகழ்வை ஒட்டி இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜை செய்யும் குருக்கள் கூறுகையில், இங்கே 9 செங்கற்கள் வைக்கப்படுகின்றன. இவை 1989ஆம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவை. மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரம் செங்கற்கள் வந்த நிலையில், அதில் “ஜெய் ஸ்ரீராம்” என்று எழுதப்பட்ட 100 செங்கற்கள் மட்டும் பூஜைக்காக எடுக்கப்பட்டுள்ளன.

* அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை தொடங்கியது. பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் உ.பி., ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். விருந்தினர்கள் அனைவரையும் பூஜையை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கோயில் கட்டுவதற்கான முதல் செங்கல்லை பிரதமர் எடுத்து வைக்க உள்ளார்.

* ராம் லல்லா சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செய்தார். இதையடுத்து மரக்கன்றுகளை நட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

* ஹனுமன் கார்ஹி கோயிலில் தலைப்பாகை அணிவித்து, வெள்ளியிலான மகுடத்தை வைத்து பிரதமர் மோடிக்கு தலைமை குருக்கள் ஸ்ரீகட்டின்ஷீன் பிரேம்தாஸ் ஜி மகாராஜ் கவுரவம் செய்தார்.

* பாரம்பரிய முறைப்படி ராமஜென்மபூமியில் உள்ள 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹனுமன் கார்ஹி கோயிலில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபட்டார். அவருடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.


Share

Related posts

காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

Admin

ஃபேஸ்புக் அவ்வளவு முக்கியம்னா வேலைய ராஜினாமா பண்ணுங்க: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Admin

பாகிஸ்தான் வெளியிட்ட அரசியல் வரைபடம்: இந்தியா கண்டனம்

Admin

Leave a Comment