நாடு முழுக்க பெரும் விவாதப்பொருளாக உள்ளது EIA2020 விவகாரம். மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை என்பதை முன்னிட்டு அரசுத்தரப்பு இதற்கு ஆதரவளித்து வருகிறது. எனினும், சூழலியலாளர்கள்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA2020) தொடர்பாக நேற்றைக்கு நடந்த தொ.கா விவாதங்களில் ஆளும் பாஜக சார்பில் கலந்துகொண்ட திரு.ராகவன், திட்டங்களில் நடைபெறும் விதிமுறை மீறல்களை எதிர்த்து குடிமக்கள் நீதிமன்றங்களை நாடமுடியாது என்கிற சரத்து #EIA2020 வரைவில் இல்லை என்றும் அதற்கான ஆதாரத்தையும் கேட்டிருந்தார்.
விதிமீறல்கள் என்ற பிரிவின்கீழ் இந்த விவகாரத்துக்கான பதில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆதாரத்துடன், ட்வீட் வழியாக பதில் வெளியிட்டுள்ளார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்,
அந்த வரைவில் “விதிமுறைமீறல்கள்” என்கிற தலைப்பு உள்ளது, இதுவரை வெளிவந்த எந்த EIA குறித்த அறிவிப்பிலும் இந்த மாதிரியான சரத்து கிடையாது. இந்த வரைவில் உள்ள விதிமுறை மீறல்கள் என்கிற சரத்து என்ன சொல்கிறது?
நடைபெற்றுள்ள விதிமுறை மீறல் குறித்த விஷயங்களை யார், எப்போது கணக்கில் கொள்ள முடியும்?
- 1. திட்டத்தை செயல்படுத்தக்கூடியவர்கள்
- 2. ஏதாவது அரசு துறையினர்
- 3. ஆய்வுக்குழுவோ, மதிப்பீட்டுக்குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது
- 4. ஏதாவது ஒரு ஒழுங்குமுறை விண்ணப்பத்தை செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரியவந்தால்
இவர்கள் எல்லாம் இது குறித்து சொல்லலாம் என்றால், மற்றவர்கள் சொல்ல முடியாது என அர்த்தம்” என்று பதிலளித்திருந்தார்.