பிரணாப் முகர்ஜி உடல் நிலை சீராக உள்ளது-அபிஜித் முகர்ஜி தகவல்

Share

டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்ததால் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு (வயது 84) மூளையில் ரத்தம் உறைந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஆர்.ஆர். ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அந்த ரத்தக்கட்டி அகற்றப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் ஆழ்ந்த கோமா நிலையை அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது.

தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில்தான் அவர் இருப்பதாக டாக்டர்கள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் நேற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என மருத்துவர்கள் அறிவித்தனர். அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில்தான் இருப்பதாக கூறிய அவர்கள், எனினும் பிரணாப்பின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

பிரணாப்புக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சைக்குமுன், ஆஸ்பத்திரியில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் முன்னாள் குடியாரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், எனது தந்தை பிரணாப் முகர்ஜி உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

தோனியின் திருமண நாளை ரசிகார்கள் சிறப்பாக கொண்டாடினர்

Admin

எடியூரப்பாவின்உடல்நிலை சீராக உள்ளது..

Admin

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Admin

Leave a Comment