இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்தும்,அவர் செய்த சாதனைகளை வாழ்த்தியும் பிரதமர் மோடி தோனிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன் தமிழ் வடிவம்:
- கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி உங்களுடைய பாணியில், ஒரு வீடியோ வெளியிட்டு ஓய்வை அறிவித்தது, ஒட்டுமொத்த இந்தியர்களின் பேசுபொருளாக மாறியது. 130கோடி மக்களும் இதனால் கவலை அடைந்தாலும், நீங்கள் நிகழ்த்திய சாதனைகளுக்காக அவர்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளார்கள்.


*வெற்றிகரமான கேப்டன்களுள் நீங்களும் ஒருவர், சிறந்த பேட்ஸ் மேன்களுக்கான வரலாற்றில் உங்கள் பெயர் முக்கியமான இடத்தில் இருக்கும், அதிலும் நீங்கள் சிறந்த விக்கெட் கீப்பரும் கூட.
*கடினமான சூழலில் அணியை வழி நடத்திய விதமும், குறிப்பாக 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியை உங்களுக்கே உரித்தான ஸ்டைலில் முடித்து வெற்றி தேடி தந்ததும், தலைமுறைகள் கடந்தும் பேசப்படும்
- மகேந்திர சிங் தோனி என்ற பெயர் வெறும் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகளுக்காகவும், சாதனைகளுக்காக்வும் மட்டும் நினைவு கூறப்படாது, மாறாக நீங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகவும் தனித்துவமானது.
*மிகவும் சாதரண பின்னணியில் இருந்து வந்து, இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் சாத்தித்துள்ளீர்கள், நீங்கள் இந்தியாவை சர்வதேச அளவில் பெருமைபட வைத்துள்ளீர்கள்.
- உங்களின் வளர்ச்சி நன்னடத்தை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தூண்டுகோல்.
- எங்கே செல்ல இருக்கிறோம் என்பது தெரிந்திருந்தால் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது முக்கியமல்ல – இந்த வாஞ்சையைதான் பல இளைஞர்களின் இதயத்தில் விதைத்துள்ளீர்கள்.
*நீங்கள் மைதானத்தில் சாதித்த மறக்க முடியாத தருணங்கள் இந்த தலைமுறை இந்தியர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது; மேலும் இவர்கள் கடினமான சூழல்களிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய தயங்க மாட்டார்கள், அதனை உங்களிடமே இருந்தே கற்றுக்கொண்டார்கள். 2007ம் ஆண்டு டி20 உலககோப்பையில் நீங்கள் பெற்று தந்த வெற்றியே அதற்கு சான்றாக விளங்குகிறது.
- சாக்ஷியும், ஸிவாவும் இனி உங்களோடு அதிக நேரம் செலவிடுவார்கள் என்று நம்புகிறேன், அவர்களின் தியாகமும் ஆதரவும் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமாகியிருக்காது.
- நமது இளைஞர்களும் தனிப்பட்ட வாழ்க்கையும், தொழிலையும் எப்படி கையாள வேண்டும் என்பதையும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள்.
- ஒரு குறிப்பிட்ட ஆட்டத் தொடரில் வெற்றி பெற்ற பிறகும் அதனை கொண்டாடாமல் உங்கள் மகளோடு ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததை ஒரு புகைப்படத்தில் பார்த்தேன், அது ஒரு சரித்திர புகைப்படமாக திகழ்கிறது.