ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி, கோசாலையை அகற்றிய அதிகாரி, எங்கு சென்றாலும் பசுமாடு ஒன்று, அவரை விரட்டி செல்லும் சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி உள்ளது.
இங்குள்ள வன பர்த்தி என்ற இடத்தில், கோசாலையை அகற்றியதால், இந்த பசுவிற்க்கு இருக்க இடமில்லை,அதனால் சம்பந்தப்பட்ட மண்டல வருவாய் அலுவலர் காரில் எங்கு சென்றாலும், விடாது பின் தொடர்ந்து, துரத்தி வருகிறது.
பொழுது புலர்ந்தால் பசுவின் கண்ணில் இருந்து இந்த அதிகாரியால் தப்ப முடியாது. ஒவ்வொரு நாளும் இதேபோல நடப்பதால், வெளியே செல்வதை தவிர்க்கும் மண்டல வருவாய் அலுவலர், எப்போதும் தனது வீட்டுக்குள் முடங்கி இருக்கிறார்.
குடியிருந்த இடத்தை பறித்த அதிகாரியை , எத்தனை காலம் ஆனாலும் விடாது துரத்தும் இந்த பசுவின் போராட்டம் பார்ப்பவர் களை வியப்பில் ஆழ்த்துகிறது.