கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக சாலையோர மீன் விற்பனைக்கு மீண்டும் தடை விதித்து கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில அறிவிப்புகளை முதல்வர் பினராயி விஜயன் புதனன்று வெளியிட்டார். அதன்படி சாலையோர மீன் விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்கப்படுவதாகவும், எதிர்வரும் ஓணம் பண்டிகையை மக்கள் அவரவர் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் ஓணம் பண்டிகைக்கு தயாரிக்கும் மலர் படுக்கைக்கு உள்ளூரில் கிடைக்கும் பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களின் காரணமாக தொற்று பரவல் அபாயம் அதிகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதேசமயம் முதல்வரின் இந்த அறிவிப்பினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நடைபாதை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.