சேகர் ரெட்டி வழக்கு… முழு விபரம் என்ன?

சேகர் ரெட்டி
Share

என்ன வழக்கு:
சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.33.6 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோதமாகப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தது.

மேலும், சேகர் ரெட்டியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்குச் சொந்தமான இடங்களிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கில் 90 நாள்களுக்குள் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சேகர் ரெட்டி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

EIA2020: பொய் சொன்னாரா ரங்கராஜ் பாண்டே?

இந்த நிலையில், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட 33.60 கோடி மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கள் (1,68,000 ரூபாய் தாள்கள், 1,680 பண்டல்கள்) எந்த வங்கியில் இருந்து மாற்றி வாங்கப்பட்டன எனக் கண்டுபிடிக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் சி.பி.ஐ.யிடம் கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த இரண்டு நாள்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிலிருந்து புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனுப்பப்பட்டன. அந்தநேரத்தில் வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் குறித்த பதிவு எதுவும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றும், அதுபோன்ற வழிகாட்டுதல்கள் எதுவும் தொடக்கத்தில் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கிகளில் மாற்றப்பட்டது என்பது தொடர்பான விசாரணையில் சி.பி.ஐ-க்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  


Share

Related posts

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு

gowsalya mathiyazhagn

மாணவர் நலனா? தேர்தல் பலனா? அரியர் மாணவர்களும், அதிமுக வியூகமும்…

web desk

கொரோனா அச்சம்:சரிவில் கோலா நிறுவனம்

gowsalya mathiyazhagn

Leave a Comment