உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹாராஷ்டிரா அரசை, வெட்கம் கெட்ட ஆட்சி என பாஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக சாடினார்.சிவசேனா தலைவரும் மஹாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, மத்திய அரசின் மீதும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் கனவுத்திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை அனாவசியம் என்றும் அதை எதிர்க்கும் விவசாயிகளுக்கே தன் முழு ஆதரவு என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்மஹாராஷ்டிரா அரசை கடுமையாக சாடிய நட்டா மஹாராஷ்டிர அரசின் சுயநலத்தையும், அவர்களின் உண்மையான நோக்கத்தையும், அம்மாநில மக்கள் புரிந்து கொண்டிருப்பர். அங்கு வெட்கம் கெட்ட ஆட்சி நடக்கிறது. கூட்டணிக்குள் சண்டையும்,பூசலும் அதிகரித்துள்ளதாகவும்கூறியுள்ளார்.