பஞ்சாப் மாநிலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வழங்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 50,000 ஸ்மார்ட் போன்கள் தயார்நிலையில் இருப்பதாக அம் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் போன்கள் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படஇருப்பதாகவும். ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடுவதாகவும். இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது எளிதாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்..