காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலமாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இன்று ந்டைபெறும் கூட்டத்தில் மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் முதலமைச்சர்களை பங்கேற்க காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசு நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை நடத்தும் தேதிகளை அறிவித்துள்ள போதும் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன