காங்கிரஸுக்கு இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வேண்டும்: பிரியங்கா காந்தி

Share

காங்கிரஸ் கட்சிக்கு இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் தலைவராக வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

2109 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸுக்கு புதிய தலைவரை விரைவில் நியமிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தலைவர் பதவி குறித்து கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

அதில், தங்களது குடும்பத்தைச் சேராத (இந்திரா குடும்பம்) ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக வேண்டும். இந்த விஷயத்தில் ராகுல் காந்தியுடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. புதியதாக வரக் கூடிய தலைவர் என்னை அந்தமான் தீவில் காங்கிரஸ் கட்சி பணிக்கு அனுப்பினாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என கூறியுள்ளார்.


Share

Related posts

அமர்நாத் யாத்திரை ரத்து: ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு

Admin

மிரலும் வாகன ஓட்டிகள்: மிரட்டும் பெட்ரோல், டீசல் விலை…

Admin

தமிழில் பேச அனுமதி இல்லை: தொழிற்சாலை மேலாளர் நிபந்தனையால் போராட்டம்

Admin

Leave a Comment