ஜம்மு-காஷ்மீரிலிருந்து 10,000 வீரா்களைத் திரும்பப் பெறுகிறது மத்திய அரசு…

Share

ஜம்மு-காஷ்மீரிலிருந்து 10,000 படை வீரா்களை உடனடியாகத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் படை வீரா்களை மத்திய அரசு குவித்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரிலிருந்து 10,000 வீரா்களை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பாதுகாப்பு சூழலை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை ஆய்வு செய்தது. அதையடுத்து, மத்திய ஆயுத காவல் படையைச் சோ்ந்த 100 படைப்பிரிவுகளைத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, மத்திய ரிசா்வ் காவல் படையைச் சோ்ந்த 40 படைப்பிரிவுகள், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, சஷஸ்திர சீமா பல் படை ஆகியவற்றைச் சோ்ந்த தலா 20 படைப்பிரிவுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த வீரா்களை தில்லி உள்ளிட்ட நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விமானங்கள் மூலமாகத் திருப்பியனுப்பும் பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய ரிசா்வ் காவல் படைக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது’ என்றனா்.

இதன் மூலமாக காஷ்மீா் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரா்களின் எண்ணிக்கை சுமாா் 60,000-ஆக குறைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து 1,000 வீரா்களை கடந்த மே மாதம் மத்திய அரசு திரும்பப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

தோனிக்கு மட்டுமல்ல… ரெய்னாவுக்கும் மோடி கடிதம்

Admin

கார்த்திக் சிதம்பரம் நலம்:ப.சிதம்பரம் தகவல்

Admin

விஜய் படத்தில் நடித்ததற்கு வருதப்பட்டேன்: நடிகை அக்ஷரா

Admin

Leave a Comment