கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
யோகா, ஜிம் பயிற்சி மையங்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதி
தனிநபர்கள் இரவு நேரங்களில் நடமாட விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்
பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடரும்
ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சி கட்டுப்பாடுகள் அறிவிப்பு
சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்
சுதந்திர தின நிகழ்ச்சியில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
எவை இயங்காது….
பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்
மெட்ரோ ரயில், தியேட்டர்கள், பூங்காக்கள் இயங்க தடை
நீச்சல் குளங்கள், மதுபான பார்களை திறக்க தடை
மத நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்
எவற்றுக்கெல்லாம் அனுமதி
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் இருப்போர் தாயகம் திரும்ப கட்டுப்பாட்டுடன் அனுமதி
மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலும், சரக்குப் போக்குவரத்திற்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி
மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையே, தனிநபர் போக்குவரத்து பற்றி மாநிலங்கள் முடிவெடுக்க அனுமதி
