மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரதமர் பொய் கூறுகிறார்: ராகுல் காந்தி கண்டனம்

Share

சீனா இந்திய நிலப் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சீனா இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது ,ஆனால் அந்த உண்மையை மறைத்து நில ஆக்கிரமிப்பை அனுமதிப்பது போல பிரதமர் மோடி செயல்படுவது தேச விரோதமாகும்.

இதை மக்கள் கவனத்திற்கு கொண்டுவராமல் மத்திய அரசு மறைப்பது மிகப்பெரிய குற்றம், பிரதமர் மோடி எல்லா செயல்பாடுகளிலும் மக்களிடம் பொய்களை மட்டுமே கூறி வருகிறார்.

அவர் தனக்கு தேசபக்தி இருப்பதாக கூறுவது கூட ஒருவகை பொய்தான். சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அனைத்து உண்மைகளையும் மக்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும், அதுவே உண்மையான தேசபக்தி என்று தெரிவித்துள்ளார்.


Share

Related posts

பள்ளி சிறுவனின் கனவை நிறைவேற்ற பாடம் சொல்லி தரும் காவலர்..

Admin

நான் தலித் அல்ல- ரித்விகா பதில்

Admin

கேரள முதல்வருக்கு கொரோனா இல்லை

Admin

Leave a Comment