கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்திய பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில்பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது