ஜார்கண்டில் காவல் துறை அதிகாரி ஒருவர், இளம்பெண் தலை முடியை பிடித்து கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் அவினாஷ் தாஸ் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவை, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் ரீட்வீட் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்திற்கு பதிலளித்த அம்மாநில டிஜிபி. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தபட்டு வருவதாகவும்தெரிவித்துள்ளார்.தாக்கப்பட்ட பெண்,காதல் திருமணம் தொடர்பாக புகார் அளிக்க வந்த நிலையில் தாக்கப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.