இந்தியாவில் நடத்தப்பட்ட தேசிய புலிகள் எண்ணிக்கை கணக்கீட்டு முடிவுகளை இன்று காலை11 மணியளவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட உள்ளார்.
சர்வதேச இயற்கை பாதுகாப்பு தினமான இன்று உலக புலிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இன்று இந்தியாவில் புலிகள் எண்ணிக்கையை வெளியிட மத்திய சுற்றூச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் இந்த அறிவிப்பை நேரலை வாயிலாகவும் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யூட்யூப் தளத்தில் பார்க்க: இங்கே க்ளிக் செய்க
முகநூல் தளத்தில் பார்க்க: இங்கே க்ளிக் செய்க