தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த நாட்களில் தொற்று நோய்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் , ‘வெப்ப மண்டல நோய்கள் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் காலம் இது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
பாதுகாப்பாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.