முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலை அகற்றுவதற்காக, டெல்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பும் இருந்தது சோதனையில் தெரியவந்தது.
இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல், வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது