அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில்; பூமி பூஜை விழாவில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அழைப்பு விடுக்கவில்லை. என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமாபாரதிக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்ட்டுள்ளது.