வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க: கழக கண்மணிகளுக்கு அதிமுக அட்வைஸ்

அதிமுக
Share

கடந்த சில நாட்களாக அதிமுக குறித்த வேட்பாளர் விவகாரம் பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில், அதனைத் தடுக்க அதிமுக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌
கழகத்தையும்‌, கழக ஆட்சியையும்‌ எப்படி மாற்றாரும்‌ பாராட்டும்‌ வண்ணம்‌
வழிநடத்தினோமோ அதைப்‌ போலவே, இனிவரும்‌ காலங்களிலும்‌ சிறப்புற ஆட்சி நடத்தி
மீண்டும்‌ ஒரு தொடர்‌ வெற்றியைப்‌ பெற நாம்‌ அனைவரும்‌ ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய
நேரமிது.

கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகளில்‌ சிலர்‌ எந்தப்‌ பின்னணியும்‌ இன்றி கூறிய
சில கருத்துகள்‌ மாற்றாருக்கு பெரும்‌ விவாதப்‌ பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை
மீண்டும்‌ ஏற்பட்டுவிடா வண்ணம்‌ புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ காலத்தில்‌ இருந்ததைப்‌
போன்று ராணுவ சுட்டுப்பாட்டுடன்‌ தலைமையின்‌ முடிவுக்குக்‌ கட்டுப்பட்டு செயல்பட
வேண்டும்‌ என்று வலியுறுத்தி கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

கட்சியின்‌ அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும்‌, கூட்டணி குறித்த.
நிலைப்பாடுகளையும்‌, புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ காட்டிய வழியில்‌ ஜனநாயக ரீதியில்‌
கழகத்தின்‌ தலைமை விரிவாக ஆலோசித்து, கழகத்‌ தொண்டர்களின்‌ மன உணர்வுகளை
எதிரொலிக்கும்‌ வகையில்‌ சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்‌. எனவே, சிறு
சலசலப்புகளுக்கும்‌ இடம்‌ தராமல்‌ நம்மை வீழ்த்த நினைப்போரின்‌ பேராசைகளுக்கு
வாய்ப்பளிக்காமல்‌, ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம்‌ அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்‌. கழக உடன்பிறப்புகள்‌ மக்கள்‌ பணிகளிலும்‌, கழகப்‌ பணிகளிலும்‌
மட்டுமே கவணம்‌ செலுத்துங்கள்‌. கழகத்தை வெற்றிச்‌ சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள்‌
பணிகள்‌ மிகவும்‌ இன்றியமையாதவை.

அனைத்து நிலைகளிலும்‌ செயல்பட்டு வரும்‌ கழகப்‌ பொறுப்பாளர்கள்‌ உள்ளிட்ட
அனைவரும்‌, எந்தவித முன்யோசனையும்‌ இன்றி, கழகத்‌ தலைமையின்‌ ஒப்புதல்‌ இல்லாமல்‌, தொலைக்காட்சிகள்‌ உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும்‌, பத்திரிகைகளிலும்‌, தங்களின்‌ தனிப்பட்ட கருத்துகளைத்‌ தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்‌
. இதை மீறுவோர்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌.

கருத்துப்‌ பரிமாற்றங்களை செய்வதன்மூலம்‌ நாம்‌ எதையும்‌ சாதிக்கப்‌ போவதில்லை.
எனவே, ஊடக விவாதங்களில்‌ கழக அரசின்‌ சாதனைகளைப்‌ பற்றியும்‌, மற்ற
மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும்‌ திட்டங்களைப்‌ பற்றியும்‌
எடுத்துச்‌ சொல்லுங்கள்‌. மக்கள்‌ என்றைக்கும்‌, புரட்சித்‌ தலைவர்‌ மீதும்‌,
புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ மீதும்‌ பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்‌.
அந்த அன்பினை நாமும்‌ பெற்றிருக்கிறோம்‌ என்பதே திண்ணம்‌..

நாளை நமதே! வெற்றி நமதே!Share

Related posts

மேகாலாய மாநில ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம்

gowsalya mathiyazhagn

இசை புயலுக்கு ஆதரவு அளிக்கும் எஸ்.பி.வேலுமணி

gowsalya mathiyazhagn

ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து: இளைஞர் காங்கிரசார் கண்டனம்

gowsalya mathiyazhagn

Leave a Comment