கந்த சஷ்டி யா மருத்துவ சீட்டா? இந்த நேரத்தில் நாம் எதைப்பேச வேண்டும். இதோ Point of Penpoint
அன்பிற்குரிய வாசகர்களே! வணக்கம்.
சமூகம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்து மதம் காக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையின் கீழே இந்துக்களே ஒன்று சேருங்கள் என்ற கோஷம் மதச்சார்பற்ற இந்தியாவில் வலுத்து வருகிறது.
ஆனால், எல்லா மதங்களுக்குமான சம உரிமையை இந்திய அரசியலைமைப்பு இந்தியர்கள் மட்டுமன்றி இந்தியாவில் வாழும் அனைவருக்கும் வழங்குகிறது. அந்த வகையில், போராட்டங்களோ ஆர்பாட்டங்களோ எதுவானாலும், முன்னெடுக்க இந்தியப் பிரஜைகளுக்கு உரிமை உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை, எந்தப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலும், யார் நடத்துகிறார்கள் என்பதை பார்ப்பது மட்டுமே பிரதான வழக்கமாக இருக்கிறது.
ஆனால், பென்பாய்ண்ட் குழுமத்துக்கு இதில் உடன்பாடில்லை. மாறாக, கோரிக்கைகளைப் பார்த்தே முடிவெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
அதன்படி, தற்போது நடக்கும் இந்து உணர்வு ஆதரவு போராட்டங்கள் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

கந்த சஷ்டி கவசம் அவமதிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை அவமதிப்போரைத் தண்டிக்க வேண்டும். இனி அவமதிக்க விடக்கூடாது. விட்டால் இந்துகள் மானங்கெட்டவர்கள் என்று ஆவர். அதைத் தவிர வேறு கோரிக்கைகள் என்ன என்று தேடிப் பார்த்தோம்.
இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வலியுறுத்தலைப் பார்க்க முடிகிறது. அதற்குமேல் ஆக்கப்பூர்வமான கோரிக்கைகள் ஏதும் காணக்கிடைக்கவில்லை.
அதே சமயம் மற்றொரு ஆரவாரக் குரலையும் கேட்க முடிகிறது. மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கைக் குரல் அது. இந்த விவகாரத்திலும், இதனை முன்னெடுப்பவர்கள் யார் என்பதைப் பார்க்கக் கூடாது.
மாறாக, வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன என்பதையே பென்பாய்ண்ட் பார்க்க விரும்புகிறது.
என்ன கோரிக்கை:
இந்தியாவில் மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% வழங்கக்கேட்கும் கோரிக்கை அது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் முரண்கடந்து அனைத்துக் கட்சிகளும் வழக்குப்பதிந்துள்ளன. அதாவது, திமுக, அதிமுக, திக, மதிமுக, பாமக மற்றும் சுகாதாரத்துறை ஆகியவை.
இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனு தாக்கல் செய்தது. அதன்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் மருத்துவப் படிப்பில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதே போல, சாதி
‘நீட்’ தேர்வு மையத்தை மாற்றும் வசதி, 15ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்
ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலமாக அதிகமான மருத்துவர்கள் நடுத்தரவர்க்கத்திலிருந்து உருவாகியுள்ளனர் என்பது மறுக்க முடியாதது.
இந்நிலையில், 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மருத்துவப்படிப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும் அபாயம் உள்ளது.

இதனை எதிர்த்தும், பொதுவெளியில் இன்று போராட்டக்குரல்கள் எழுந்துள்ளன. இதில் பேசப்பட வேண்டியதும், பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டியதும் எது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தல் கந்த சஷ்டி கவச விவகாரமா அல்லது மருத்துவ இட ஒதுக்கீடா என்ற கேள்விக்கு மருத்துவ இட ஒதுக்கீடுதான் என்றுதான் பதிலளிக்க வேண்டி உள்ளது.
காரணம், இரண்டாலும் சமூகத்தில் ஏற்படப்போகும் விளைவுதான். பிள்ளைகளின் கல்வி குறித்த ஒரு விவகாரம், மத உணர்வு தொடர்பான ஒரு விவகாரம் என இரண்டு விவகாரங்கள் நம் முன் நிற்கிறது. இரண்டில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்வியே இந்த விவகாரத்தில் பதில்.