மாணவர் நலனா? தேர்தல் பலனா? அரியர் மாணவர்களும், அதிமுக வியூகமும்…

அதிமுக
Share

தமிழ்நாடு முழுக்க அரியர் தேர்வுகளுக்கான தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதும், அதன் தொடர்ச்சியாக அரியர் மாணவர்களின் அரசனே என்று எடப்பாடி பழனிசாமி கொண்டாடப்படுவதும் நீங்கள் அறிந்ததே.

பல்கலைக் கழகத் தேர்வு எழுதவிருந்த மாணவர்கள் (இறுதியாண்டு இறுதித் தேர்வுகள் எழுதுவோர் தவிர) அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். இவற்றை வாக்குகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறது அதிமுக. தன் கிளைக்கழக உறுப்பினர்களின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான வேலைகள் படு தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன என்ற தகவல் பெண்பாய்ண்ட்க்கு பிரத்யேகமாகக் கிடைத்தது.

Tamil News | Breaking News

குறிப்பாக, “டிகிரி முடிச்சாச்சு. அடுத்தென்ன? உனக்குன்னு ஊருக்குள்ள ஒரு கௌரவம் வேணும்ல.”, “அடுத்தென்ன ஆளாயிடலாம் இனி”, “படிப்பு முடிச்சாச்சுல்ல, நம்ம கட்சியில் பொறுப்பு தாரேங்கிறாங்க” இது போன்ற வசனங்களால் இளஞர்களைக் குறிவைத்து அதிமுகவின் வாக்குகளாகவும், வாக்கு ஊற்றுகளாகவும் மாற்றும் திட்டம் இருப்பதாகவும் தெரியவந்தது.

மாணவர்நலன் கருதி தேர்வுகளை நடத்த வேண்டம் என்று உத்தரவிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கிறார். மகிழ்ச்சி. ஆனால், உண்மையிலேயே மாணவர் நலன் என்றால், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த நலனும் தேவை இல்லையா?

அரியர் தேர்வுகளை ரத்து செய்தது மாணவர்களுக்கு நிஜமாகவே மகிழ்ச்சிதான். கல்வியில் முன்னேற்றம் என்பது அவர்கள் அடுத்தடுத்த எல்லைகளைத் தொடுவதற்கு பலதரப்பட்ட பிரிவுகளை அறிமுகம் செய்வதன் மூலமே சாத்தியம். அதற்கு வழிவிடுங்கள். கோஷ்டிப் பூசல்களுக்கும் ஊரக அரசியல் அடிதடிகளுக்கும் மாணவர்களை இழுத்துவிடாதீர்கள். இது தலைமைக்கு தெரிந்து நடக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. ஒருவேளை தெரியவந்தால் தயவு செய்து இந்த நடவடிக்கை வேண்டாம் என்று உங்கள் கழகக் கண்மணிகளுக்கு தெரியப்படுத்துங்கள்.

அற்பமான வாக்கு அரசியலுக்காக இந்த சூழ்நிலையைப் பயன்படுத்த வேண்டாம் என்பதே அதிமுகவுக்கு பென்பாய்ண்ட் குழுமம் வைக்கும் இப்போதைய வேண்டுகோள்.


Share

Related posts

அப்துல்கலாம்: பேய்க்கரும்பு மணிமண்டபத்தில் திமுக மரியாதை

Admin

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…

Admin

தமிழில் பேச அனுமதி இல்லை: தொழிற்சாலை மேலாளர் நிபந்தனையால் போராட்டம்

Admin

Leave a Comment