கொரோனா மருந்து விவகாரத்தில் தெளிவான திட்டத்தை மத்திய அரசு வகுப்பது அவசியம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருந்து கண்டுபிடிக்கப்படும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதுகுறித்து ட்விட்டரில் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட பதிவில், கொரோனா மருந்து தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவாக வாய்ப்புள்ளது என்றும், அந்த மருந்து அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைப்பதையும், நேர்மையாக விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்ய திட்டம் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த திட்டத்தை மத்திய அரசு தற்போதே உருவாக்க வேண்டும் எனவும் அதில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.