தமிழா? தெலுங்கா? உண்மையிலேயே எஸ்.பி.பி.யின் முதல் பாடல் எது?

SPB
Share

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் எது என்று கேட்டால், அடிமைப்பெண் படத்தில் வந்த ஆயிரம் நிலவே வா பாடல் என்று பலரும் சொல்வர். ஆனால், அது உண்மையல்ல. அப்படியென்றால் எஸ்.பி.பி.யின் முதல் பாடல் எது?

1964 ஆம் ஆண்டில், மெட்ராஸை தளமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசை போட்டியில் முதல் பரிசை வென்றார். எஸ்.பி. கோதண்டபாணி மற்றும் கந்தசலா ஆகியோரால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு பாடல் போட்டியில் அவர் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1966 – ம் ஆண்டு, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமன்னா எனும் தெலுங்கு திரைப்படத்தில் தான் எஸ்.பி.பி முதல் முறையாகப் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். அங்கு ‘எமியே விண்ட்டா மோகம்’ என்ற பாடலைப் பாடினார். அதுதான் எஸ்.பி.பியின் இசைப்பயணத்தில் முதல் பாடல்.

தமிழில் முதல் பாடல் எம்.ஜி.ஆர்.நடிப்பில் வெளியான அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல்தான் என்று செய்திகள் உலவி வருகின்றன. அது உண்மையல்ல.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து, ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் ’அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் தமிழ் பாடல். ஆனால், எதிர்பாராத விதமாக ஹோட்டல் ரம்பா படம் வெளியாகவில்லை.

அதன்பிறகுதான், சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் ‘இயற்கையெனும் இளையகன்னி’ பாடலை எஸ்.பி.பி பாடினார்.

ஆனால், அந்தப் படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படம் வெளியாகிவிட்டது. இதன் விளைவாகவே எஸ்.பி.பி. பாடிய ’ஆயிரம் நிலவே வா’ பாடல் அவரது முதல் பாடல் என்று சொல்லப்படுகிறது.


Share

Related posts

மூடப்பட்டது சேலம் ஆட்சியர் அலுவலக வளாகம்

Admin

போறது பெரியாரு… கப்பலை நிறுத்து: காமராஜர் செய்த சுவாரஸ்யம்

Admin

சதுரகிரியில் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அனுமதி இல்லை

Admin

Leave a Comment