சென்னை அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியாத நிலையில் தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “டிரீம் 11 ஐபிஎல் 13ஆவது சீசனுக்கான கடுமையான சுகாதார மற்றும் மருத்துவப் பாதுகாப்பு விதிமுறைகளை பிசிசிஐ ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 19 முதல் ஐபிஎல் தொடர் தொடங்கும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று கூறப்பட்டுள்ளது.