ஐபிஎல் 13ஆவது சீசனுக்கு டைட்டில் ஸ்பான்சராக டிரிம் 11 தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய லோகோ ஒன்றை ஐபிஎல் நிர்விகாம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவுடன் #Dream11IPL என்ற ஹேஸ்டாகை இணைத்துப் பதிவிட்டுள்ளது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.