டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு…

Share

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து – பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டெஸ்ட் தொடருக்கு அடுத்ததாக டி20 தொடரில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் 28 முதல் டி20 தொடர் தொடங்குகிறது.

டி20 தொடரில் விளையாடவுள்ள மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி:

மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, பேர்ஸ்டோவ், டாம் பாண்டன், சாம் பில்லிங்ஸ், டாம் கரண், ஜோ டென்லி, லூயிஸ் கிரேகோரி, கிறிஸ் ஜார்டன், சகிப் முகமது, டேவிட் மலான், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி. 


Share

Related posts

மாஸ்க் கில் தேசியக்கொடி… குப்பையில் வீசவா?

Admin

தமிழா? தெலுங்கா? உண்மையிலேயே எஸ்.பி.பி.யின் முதல் பாடல் எது?

Admin

ரூ.833 கோடியை வோடஃபோன் நிறுவனத்திற்கு திருப்பி தர வேண்டும் : வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Admin

Leave a Comment