பிளஸ்-2 மார்க் ஷீட், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2
Share

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், மறுகூட்டலுக்கு விண்னப்பிக்க இன்று முதல் தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வழக்கமாக, தேர்வு முடிவு வெளியான அன்றைய தினமே விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு எப்போது விண்ணப்பிப்பது போன்ற தகவல் தெரிவிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தேர்வு அப்படியில்லை. முடிவு வெளியான 6 நாட்களுக்கு பிறகுதான் வெளியானது.

அந்த அறிவிப்பின் படி, விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து: முதல்வர் அறிவிப்பு

மேலும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நாளை(சனிக்கிழமை) முதல் வழங்கப்படும். மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கருத்தில்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பணியாளர்கள் பள்ளிக்கு வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

டேய் பாலு.எழுந்து வாடா..: கண் கலங்கிய இயக்குநர் பாரதிராஜா

Admin

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி அறிவித்த பிரதமர்…

Admin

கூட்டுறவுத்துறைக்கு சுற்றறிக்கை : நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

Leave a Comment