லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. துறைமுகப்பகுதியே நிலைகுலைந்தது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன் அளவிலான வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உலகெங்கும் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளின் ஆபத்து குறித்தும் அவை பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் டன் கணங்கில் சென்னை சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஒரு தனியார் பட்டாசு தயாரிப்பு நிறுவனத்தால் வெளிநாட்டில் இருந்து 740 டன் அளவில் அமோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 36 கண்டெய்னர்களில் சராசரியாக 20 டன் அளவில் இருந்த வேதிப்பொருள் சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வழியாக கொண்டுவரப்பட்டது.