நடிகர் ஷியாம் கைது: பின்னணி என்ன

Share

பணம் வைத்து சூதாட்டம் விளையாடிய விவகாரத்தில் நடிகர் ஷாம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார் நடிகர் ஷாமின். வீட்டில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்றிரவு ஷாம் வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் நடிகர் ஷாம் உட்பட 13 சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்களை கால்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து பணம், சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யபட்டன. பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 12 பி, ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே,லேசா லேசா இயற்கை, உள்ளம் கேட்குமே உள்பட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் ஷாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

வாய வச்சுக்கிட்டு சும்மா இருங்க: கழக கண்மணிகளுக்கு அதிமுக அட்வைஸ்

Admin

அப்போல்லாம் SPBக்கு சம்பளம் 5000ரூவா தான்: தயாரிப்பாளர் தானு

Admin

செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

Admin

Leave a Comment