இதெல்லாம் ஆண்மையான செயலா: ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?

Share

அதிமுக அரசு, ஆண்மையுள்ள அரசுதான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஹெச்.ராஜாவின் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது,

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஹெச்.ராஜாவின் வலிமை, ஆளுமை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என கூறினார்.

விளம்பரத்திற்காக தான் ஹெச்.ராஜா இப்படி பேசுவதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ட்விட்டரில் கருத்தை தெரிவித்து விட்டு, அட்மின் தெரிவித்தாக கூறுவதும், நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதும் ஆண்மையான செயலா என கேள்வி எழுப்பினார்.


Share

Related posts

ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்சார கட்டணமா?: திமுக போராட்டம்

Admin

மாணவர்களுக்கு முட்டை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

Admin

சன் டிவி தலைமையானார் நியூஸ்18 குணசேகரன்

Admin

Leave a Comment