நூலகங்களுக்குப் போகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

நூலகம்
Share

அன்பிற்கினிய பென்பாய்ண்ட் வாசகர்களே!

தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்கப்பட உள்ளன். ஊரக நூலகங்கள் உட்பட அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பதையும் நினைவ்ல் கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுமானவரை வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. அதற்கும் மேல் அவசியமாக நீங்கள் நூலகத்துக்கு செல்வதாக இருந்தால் கீழ்க்கண்ட அறிவுரைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று penpoint.in கோரிக்கை வைக்கிறது.

நூலக விதிமுறைகள்:

* கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழு நேர கிளை நூலகங்களில் உள்ள புத்தகங்கள் எடுத்துக் கொடுக்கும் பிரிவு, பரிந்துரை புத்தகங்கள் உள்ள பிரிவு, சொந்த புத்தகங்களை படிக்கும் பிரிவுகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* புத்தகங்களை வாசகர்கள் சுற்றுக்கு வழங்கும் பிரிவுகள் கிளை நூலகங்கள், கிராம நூலகங்களில் மட்டும் இயங்கலாம்.

* நூலகங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் செயல்பட வேண்டும்.

* கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள் வழக்கமான பணி நேரமான மதியம் 2 மணிவரை இயங்கலாம்.

* பகுதி நேர நூலகங்கள் திறக்க அனுமதியில்லை.

* அனைத்து நூலகங்களிலும் நாளிதழ்கள் பிரிவுக்கு வாசகர்கள் அனுமதிக்க கூடாது.

* நூலகர்கள், நூலகப் பணியாளர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அவசியம் அணிய வேண்டும்.

* வாசகர்கள் கேட்கும் நூல்களை நூலடுக்குகளில் இருந்து, நூலக பணியாளர்கள் தான் எடுத்துக் கொடுக்க வேண்டும்.

* 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூலகங்களில் அனுமதியில்லை.

* 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் நூலகத்தில் அனுமதி இல்லை.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நூலகங்கள் ஊரடங்கு முடியும் வரை திறக்க அனுமதியில்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நபர்கள் அந்த நூலகங்களில் சென்று படிக்க அனுமதியில்லை.

Bookworms, These Are The Best Libraries In Mumbai | LBB, Mumbai

* நூலகங்களில் குளிர் சாதன வசதிகளுக்கு அனுமதியில்லை.

* சொந்த புத்தகங்களை எடுத்து வந்து படிப்போர் தங்கள் புத்தகங்கள் மற்றும் லேப்டாப்களை மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. மேலும் அந்த பிரிவில் இருந்து நூலகத்தின் வேறு பிரிவுகளுக்கு எந்த பொருளும் எடுத்துச் செல்லக் கூடாது.

* புத்தகம் படிக்கும் பிரிவில் குழுவாக அமர்ந்து ஆலோசிக்கவோ விவாதிக்கவோ அனுமதிக்க கூடாது.

* நூலகங்களுக்கு வரும் வாசகர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை சிறு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த பிறகு, நூலகப் பணியாளர்கள் அந்த புத்தகங்களை எடுத்து வந்து கொடுக்க வேண்டும்.

* நூலகங்களுக்கு வருவோரில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் பரிந்துரை நூல்கள் பிரிவுக்கு அனுமதிக்க வேண்டும். 


Share

Related posts

பிளஸ்-2 மார்க் ஷீட், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Admin

புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து எந்த விபரமும் இல்லை: கைவிரித்த அமைச்சர்

Admin

ஜெயலாலிதா உயிருடன் இருந்தபோது எங்க இருந்திங்க?:ஜெ.தீபாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Admin

Leave a Comment