சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, தான் இந்தியரா என்று அந்த அதிகாரி கேட்டதாக திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில்இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியரா என்று கேட்டார். எப்போதிலிருந்து இந்தியராக இருப்பது ஹிந்தி தெரிந்திருப்பதற்கு சமமானது என்பதை அறிய விரும்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி.