தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்பது பற்றியும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.