சென்னையில் தனியார் பள்ளியில், ஊரடங்கிலும் மாதந்திர தேர்வு நடத்தியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு எழுதுவதற்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு வந்துதுள்ளது, மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரபல சுசில் ஹரி இன்டர்னேஷ்னல் ரெசிடென்சி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாதந்திர தேர்வு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.
கோப்புகாட்சி:

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாலை முரசு தொலைக்காட்சி நேடியாக சென்று களவு ஆய்வு மேற்கொண்டது. அப்போது தேர்வு எழுத 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதற்காக தேர்வு அட்டவணையையும் பள்ளி நிர்வாகம் வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதும் காட்சிகளையும் மாலைமுரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்திய தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தனியார் பள்ளிகள் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.