கூட்டுறவுத்துறைக்கு சுற்றறிக்கை : நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை

Share

கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் தமிழக அரசு,சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மற்ற பணியாளர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்குறிப்பிடப்பட்டுள்ளது

.அனைத்து நியாய விலைக்கடைகளிலும் போதுமான முகக்கவசம், கையுறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Share

Related posts

வடமாநில விழாவுக்கு தமிழகத்தில் கடையடைப்பா? கொந்தளித்த சீமான்

Admin

எஸ்.பி.பிக்கு பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

Admin

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள்-தேடும் பணி தீவிரம்

Admin

Leave a Comment