மீண்டும் ஊரடங்கு:ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம்

Share

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு தளர்வுகளுடனும், ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எவ்ற்றுக்கெல்லாம் அனுமதி,தடை:

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்காணும் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

*தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

*உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படும்.

*காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதி.

*உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி

*ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள மத வழிபாட்டுத் தளங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி.

*காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை இயங்க அனுமதி

*பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது

*இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

*மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், இ பாஸ் பெற வேண்டும்.

*ஆகஸ்ட் 15ம் தேதி, மத்திய அரசின்வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல்
போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

*ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கானதடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்


Share

Related posts

வடமாநில விழாவுக்கு தமிழகத்தில் கடையடைப்பா? கொந்தளித்த சீமான்

Admin

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

Admin

தமிழில் பேச அனுமதி இல்லை: தொழிற்சாலை மேலாளர் நிபந்தனையால் போராட்டம்

Admin

Leave a Comment