திமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே தான் போட்டி நடைபெறுகிறது என அண்மையில் விபி துரைசாமி அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் துறைமுகம் தொகுதியில் மண்ணடியில் கழிப்பிடம் கட்டுமான பணியை தொடங்கி வைக்க சென்றிருந்தார் திமுக கட்சியின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன்.
அப்போது பேசிய அவர், திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே போட்டி என்ற துரைசாமியின் கருத்து நகைப்புக்குரியது எனவும், கூடா நட்பு கேடாய் முடியும் என்பது பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுகவிற்கு தான் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.